Header image alt text

‘சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு’ கூட்டமைப்பு வலியுறுத்தல்

TNAஇலங்கையில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வின் அடிப்படையின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், கூட்டமைப்பின் இந்தக் கருத்து வந்துள்ளது.

கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Read more

வெளிநாட்டு நீதிபதிகளை ‘இறக்குமதி’ செய்யப்போவதில்லை – ஜனாதிபதி மைத்திரி
 
maithriஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை. என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

‘உள்நாட்டு பொறிமுறை மூலமாகத் தான் இந்த நடவடிக்கையை செய்ய வேண்டும் என்று மிகவும் தெளிவாக நான் கூறியிருக்கிறேன். அவ்வாறே எமது அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும் அது அமையவேண்டும். அதேபோல, வெளிநாடுகளிலிருந்து நீதிபதிகளைக் கொண்டுவரவும் எதிர்பார்க்கவில்லை.அதற்கு நான் இணங்கவும் மாட்டேன்’ என்றார் மைத்திரிபால சிறிசேன. Read more

வட மாகாணசபை ததேகூ உறுப்பினர்கள் – முதலமைச்சர் சந்திப்பில் ‘இணக்கம்’

vigneswaranஇலங்கையில் வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று புதனன்று மாலை அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் சர்ச்சைக்குரியதாக இருந்த பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வினைத்திறன் மிக்க ஒரு சபையாக வடமாகாண சபையை செயற்படுத்துவது, தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணைந்து கொண்டிருப்பது, அரசியல் தீர்வுக்கான விடயத்தில் வடமாகாண சபையின் பங்களிப்பு ஆகிய விடயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. Read more

இலங்கையில் இனி அரசியல் கைதிகள் என எவரும் இருக்கமாட்டார்கள்.- பிரதமர் ரணில்

ranilபோட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் இலங்கை முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாக,  அத்துடன் சீனாவின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிற்ஸர்லாந்தில் இன்று ஆரம்பமாகியுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள, ரணில் விக்ரமசிங்க, ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் இனி தமிழ் அல்லது சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பாலானோர் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுதலை செய்யப்படலாம் எனவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் குறித்து விஷேட கலந்துரையாடல் – ஜனாதிபதி
 
maithriவடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர், வடக்கு ஆளுனர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய நத்தார் தின நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களுக்கும் விஜயம் செய்தார்.

இதன்போது அம் மக்களை 6 மாத காலப்பகுதிக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அதிகாரிகளிடம் வினவியதோடு, வடக்கின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

சிங்கப்பூரில் 27 வங்கதேசப் பிரஜைகள் கைது

singaporeசிங்கப்பூரில் கடும்போக்குவாதச் செயல்களில் பங்கேற்க திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வங்கதேசப் பிரஜைகள் இருபத்து ஏழு பேரை தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் மட்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஏனையோர் சிங்கப்பூரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்களாக வேலைபார்த்துவந்த இவர்கள் அனைவரும் அண்மைய வாரங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பான்மையானோர் கடும்போக்கு கருத்துகளையும், ஜிகாதி சித்தாந்தம் தரவுகளையும் பரிமாறிக்கொண்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரிலேயே வங்கதேசப் பிரஜைகள் வேறு பலரை தமது குழுவில் சேர்க்க இவர்கள் முயன்று வந்தார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் தால்குதல்
 
Pakபாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் பயங்கரவாதிகள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததாக அந்தநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் நடந்தபோது இந்த பல்கலைக்கழக வளாகத்துக்குள் சுமார் 3500 பேர் வரை இருந்ததுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு, தெக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது எனவும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. தற்போது அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேற்றப்பட்டு, அந்த நாட்டு காவல்துறை அதனைச் சுற்றிவளைத்துள்ளது.

 

தென்னாபிரிக்க உயர்தானிகர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் சந்திப்பு-

sampanthanஇலங்கைக்கான தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் ஜெப் டொஜ், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, உத்தேச அரசியல் யாப்பு மற்றும் நல்லிணக்கம் உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பொறுப்புகூறல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலக முடியாது எனவும் அந்த பிரேரணையிலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் அப்படியே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அந்த தீர்வானது அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக அமைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் அக்கறையுடன் இருப்பதாக கூறிய உயர் ஸ்தானிகர், தென்னாபிரிக்க அரசானது, இந்த விடயம் தொடர்பில் எந்த வேளையிலும் தனது ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார் நல்லிணக்கம் தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுபவங்கள் இலங்கைக்கு அவசியமானது என இரா.சம்பந்தன் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வருடங்களின் பின் மன்னார் அபிவிருத்திக் குழுக்கூட்டம்-

mannarமன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் இன்று நடைபெற்றுள்ளது.

அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கே.கே மஸ்தான் ஆகியோர் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

எனினும், இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லையென கூறப்படுகின்றது.

இன்றைய கூட்டத்திற்கு வட மாகாண அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும் கூறப்படுகிறது. எனினும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர் குணவர்த்தன காலமானார்-

ertrtrகொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன காலமானார்.

இவருக்கு வயது 70 என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, பொது வேட்பாளராக, அன்றைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்.

இதன்படி மைத்திரிபால சிறிசேன தனது முடிவை அறிவிக்கும் பொருட்டு நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் குணவர்த்தனவும் கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து தேர்தலில் வெற்றியடைந்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும், புதிய அரசாங்கத்தில் முக்கிய இடம்பிடித்திருந்த இவர், பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

பின்னர் காணி அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. எனினும் அண்மைக் காலமாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குணவர்த்தன இன்று இயற்கை எய்தியுள்ளார்.

இராணுவ வாகனம் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி-

accidentமன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் மீடியா பண்ணைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

இந்தச் சம்பவம் இன்றுகாலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த இராணுவத்தின் பேருந்தும் கொழும்பிலிருந்து வந்த கார் ஒன்றுமே நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முன்னிலை சோசலிசக் கட்சி ஆர்ப்பாட்டத்தின்மீது நீர்தாரை-

waterகொழும்பு கோட்டை – லோட்டஸ்ட் வீதிப் பகுதியில், முன்னிலை சோசலிசக் கட்சியினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் போது, பொலிஸாரால் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வைத்தே, ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்ய வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்டோர்க்கு நோட்டீஸ்-

human rightsஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகம உள்ளிட்ட சில அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சுக்கு முன்னால், எச்.என்.டீ.ஏ மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட, பொலிஸ் அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.

இதன்போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தீர்மானித்துள்ளது.

இதன்படி இவர்களை எதிர்வரும் பெப்ரவரி 15ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் ஜூனில் நடைபெறவுள்ளது-அமைச்சர் பைசர் முஸ்தபா-

faiser mustafaஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ளதோடு, அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல் மாதமளவில் வெளியிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஏப்ரலுக்கு முன்னர் எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்யுமாறு, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும் பழைய தேர்தல் முறையின் கீழ், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த எந்தவொரு திட்டமும் இல்லை எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு-

fghghghசுவிட்ஸர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்றினால் நடத்தப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது.

பேராசிரியர் நவரத்ன பண்டார தலைமையிலான அரசியலமைப்புக் கற்கை நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் பிரிபோக் பல்கலைக்கழகமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தன. ‘

அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பு மாதிரிகள், பல்லின சமூகங்களில் சவால்கள் மற்றும் பார்வைகள்’ எனுப் கருப்பொருளில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மிருசுவில் கொலை வழக்கு மூவருக்கு மரணதண்டனை-

jaffna courtsயாழ். மிருசுவில் பகுதியில் நபர் ஒருவரை உலக்கையால் அடித்துக்கொலை செய்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முருகேசு சத்தியநாதன் என்பவரே அவரது வீட்டில் வைத்து இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டவராவார். கோலையைச் செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அதே இடத்தைச் சேர்ந்த 3 நபர்கள் சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். மேற்படி வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தீர்ப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு, முருகேசு சத்தியநாதனின் வீட்டிற்கு சென்ற மூவரும், அவரை உலக்கையால் தலையில் அடித்துக்கொலை செய்துள்ளனர். கொலை செய்த உலக்கையினை சாவகச்சேரி குடம்பியன் இராணுவ முகாமிற்கு அருகாமையில் உள்ள வயல்வெளியில் இரத்தத்துடன் வீசிவிட்டுச் வாகனத்தில் சென்றுள்ளனர். குறித்த உலக்கையினை எறியும்போது, அதைக்கண்ட இராணுவ சிப்பாய் இராணுவ அதிகாரிக்குத் தெரிவித்து, குறித்த உலக்கை தடயப்பொருளாக இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. Read more

காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு நிரந்தர உறுதிப்பத்திரம்-

fdfdகாணி உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இம்முறை வரவு செலவுத்திட்ட தீர்மானத்திற்கு அமைய 17 இலட்சம் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.ஏ.கே. மஹாநாமா தெரிவித்துள்ளார். இதன்கீழ் சுவர்ணபூமி, ஜயபூமி, ஆகிய உறுதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கும், ஏனைய அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பதவர்களுக்கும் நிரந்தர காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான காணி சட்டத்திருத்தத்தை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் காணி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 50 சூட்கேசு அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

iமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தின் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் 16.01.2016 அன்று

இல்ல மாற்றுத்திறனாளி மாணவர்களான விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் வாய்பேச முடியாதவர்கள் என 50 இல்ல சிறார்களுக்கு

ரூபா 65000 பெறுமதியான 50 சூட்கேசுகள் அன்பளிப்பாகவழங்கபட்டன. அத்துடன் இல்ல சிறார்களுக்கு சிறப்பு மதிய உணவும் வழங்கபட்டது. (வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ) Read more

முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் ஊடாக யாழ்ப்பாணம் பஸ் சேவை-(படங்கள் இணைப்பு)

20160114_070702முல்லைத்தீவில் இருந்து தண்டுவான், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஊடாக யாழ்ப்பாணம் பஸ் சேவை பல ஆண்டுகளுக்குப் பின்னர் (14.01.2015) அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராசா ஆகியோரும், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநரதன், க.சிவநேசன் (பவன்) அவர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிபத்துடுவ, செயலாற்று முகாமையாளர் கே.கேதீஸ்வரன், கணக்காளர் கே.செவ்வந்திராஜா, முல்லைச்சாலை முகாமையாளர் எஸ்.மனோகரன், முல்லைச்சாலை பொறியியலாளர் பி.ஆர்.றோமியன், காரைநகர்சாலை முகாமையாளர் கே.ஜெயராஜா முல்லை, ஆகியேரருடன் பிரதேசமக்கள், பொது அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். Read more