Header image alt text

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களை குடியமர்த்த செயலணி-

kayanthaவடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்களை மீள் குடியமர்த்துவதற்கு விசேட செயலணியொன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதேவேளை மீள்குடியேற்றம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு நடைமுறைப்படுத்திய திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் அமைச்சரவைக்கு முன்வைத்த தகவல்கள் குறித்தும் அமைச்சரவை தனது கவனத்தை செலுத்தியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக மேற்கண்ட அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்தார்.

Read more

தமிழ் தேசிய இளைஞர் கழக அனுசரணையில் கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-

IMG_3031வவுனியா கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (05.07.2016) முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்திருந்தார். நிகழ்வின் கௌரவ அதிதிகளாக வ.முருகனூர் சாரதா வித்தியாலய அதிபர் திரு பி.நேசராஜா, வ.கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபர் திருமதி ஓங்காரநாதன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். சிறப்பு அதிதிகளாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.சந்திரிக்கா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் திரு முத்தையா கண்ணதாசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்தியகுழு இளைஞரணி செயற்பாட்டாளர் திரு சு.காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) பின்லாந்து இணைப்பாளர் சந்துரு மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் திரு த.நிகேதன், அமைப்பாளர் திரு வ.பிரதீபன் , பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். Read more

குற்றம் இழைத்திருப்பின் தண்டிக்கப்பட வேண்டும்-அமைச்சர் மங்கள சமரவீர-

mangalaஇராணுவத்தைச் சேர்ந்த சிலரோ, அரசாங்கத்திலுள்ள சிலரோ நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தண்டிக்கப்பட வேண்டும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரேமவதி மனம்பேரி சம்பவம் தொடர்பில் இவ்வாறாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் கலந்து கொண்ட பின்னர், இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அப்பாவி மக்களைக் கொலை செய்யும் மோசமான மனநிலை கொண்ட இராணுவம் எம் வசம் இல்லை எனக் குறிப்பிட்ட மங்கள சமரவீர், எவரேனும் குற்றம் செய்திருப்பின் அது உயர்மட்டத்தில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையிலேயே எனவும் தெரிவித்துள்ளார். Read more

முன்னாள் போராளிகள் புலனாய்வுப் பிரிவினரால் கைது-

arrest (30)முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த கேதீஸ்வரன்சா – வித்திரி தம்பதியினர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9.00 மணியளவில் மூன்று வாகனங்களில் சென்றிருந்த இருபதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினராலேயே குறித்த குடும்பம் சுற்றிவளைக்கப்பட்டு இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டபோது குறித்த இடத்திற்கு பெண் பொலிசார் யாரும் வரவில்லை என்றும் இவர்கள் இருவரும் முன்னாள் போராளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கைதுகளால் முன்னாள் போராளிகளும் பொதுமக்களும் பெரிதும் அச்சமடைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா உதவி-

srilanka indiaஇலங்கையில் ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது, தொடர்பான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றுள்ளது. இக் கூட்டத்தில், இந்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, இலங்கை சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், இரு நாட்டு ரயில்வே துறை அதிகாரிகளும், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இலங்கையில் தற்போதுள்ள ரயில்வே வழித்தடங்களை மேம்படுத்துவது, சிக்னல்கள், தொலைத் தொடர்பு வசதிகள் ஆகியவற்றை நவீனப்படுத்துவது உட்பட சில முக்கிய விவகாரங்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். இதன்போது, இலங்கையில் ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்தியா நிதியுதவி செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாலாயிரம் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்-

electricity boardஇலங்கை மின்சார சபையுடன் இணைந்த மற்றும் ஆட்பலம், குத்தகை அடிப்படையில் சேவையாற்றிய சுமார் 4ஆயிரம் ஊழியர்கள் செம்டெம்பர் 4ஆம் திகதிமுதல் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட, நீண்ட காலம் சேவையில் இருந்து, மின்மானி வாசிப்பு மற்றும் ஆட்பல வேலைகளில் ஈடுபட்ட சகல ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. செப்டெம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எட்கா ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இணக்கம்-

fishingஇந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப கூட்டுறவு ஒப்பந்தம் (நுவுஊயு) குறித்து, பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும் அதனை இவ் வருடத்துக்குள் நிறைவு செய்யவும், இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு இடையில், டெல்லியில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு இந்தியக்குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வவுனியா ஓர்கன் புதுவாழ்வு பூங்கா மாணவர்களுக்கு விசேட உணவு வழங்கல்.!(படங்கள் இணைப்பு)-

IMG_2820ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இவ் விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு 04.03.2016 திங்கட்கிழமை கூமாங்குளத்தில் அமைந்துள்ள ஓர்கன் புதுவாழ்வு பூங்காவில் நடைபெற்றது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்திய கிழக்கு நாடுகளின் இணைப்பாளர்களில் ஒருவரான தோழர் குணா அவர்களின் ஊடாக இவ் விசேட உணவு வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் திரு. முத்தையா கண்ணதாசன், அதன் மத்தியகுழு இளைஞரணி செயற்பாட்டாளர் திரு சு.காண்டீபன், அதன் பின்லாந்து இணைப்பாளர் சந்துரு மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் திரு த.நிகேதன், அதன் அமைப்பாளர் திரு வ.பிரதீபன் மற்றும் ஓர்கன் புதுவாழ்வு பூங்காவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Read more

“புளொட்” வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, சூரிச்சில் சிறப்பாக நடைபெற்ற பரீட்சைப் போட்டி..!(படங்கள் இணைப்பு)

008எதிர்வரும் 10.07.2016 (ஞாயிற்றுக்கிழமை) சுவிஸ்லாந்தின் சூரிச்சில் நினைவு கூரப்படவுள்ள 27ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் (03.07.2016) சுவிஸ், சூரிச் மாநிலத்தில் தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் பரீட்சைப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. மேற்படி பரீட்சைப் போட்டியினை “புளொட்” சுவிஸ்கிளைத் தோழர் ரஞ்சன் அவர்கள், அஞ்சலியுடன் ஆரம்பித்து வைத்து “மேற்படி பரீட்சையை நடாத்துவது” பற்றி உரையாற்றினார். இதன்போது அவர், “தாங்கள் எந்தவித அரசியல் காரணங்களுக்காகவும் அல்லாது மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவே இதனைச் செய்வதாக” குறிப்பிட்டுக் கூறினார். இதனைத் தொடர்ந்து பரீட்சை போட்டிகள் நடைபெற்றன. மேற்படி பரீட்சைப் போட்டிகளில் தமிழ், டொச் மொழி, கணிதம், வர்ணம் தீட்டுதல் மற்றும் பொது அறிவுப்போட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. Read more

சங்குவேலி விநாயகர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016-(படங்கள் இணைப்பு)-

IMG_20160703_135731யாழ். உடுவில் சங்குவேலி விநாயகர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நேற்று முன்தினம் 02.07.2016) சனிக்கிழமை முன்பள்ளியின் போசகர் திரு. திருமுருகன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக முன்னாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதையடுத்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. Read more

6x8 invitation

கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழக தீபாவளி துடுப்பாட்ட போட்டி-முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆரம்பித்து வைப்பு(படங்கள் இணைப்பு)-

IMG_2743வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் தீபாவளி தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று(03.07.2016) பிற்பகல் 2மணியளவில் கோவில்குளம் இந்துக் கல்லூரி மைதானத்தில், கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத் தலைவர் திரு க.பார்த்தீபன் தலைமையில் வெகு சிறப்பாக ஆரம்பமானது. இவ் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்ப போட்டியினை தொடக்கி வைத்தார். ஆரம்ப போட்டியில் அல்-மதினா மற்றும் என்.சி.சி. விளையாட்டு கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இவ் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு கா.பார்த்தீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகம் மற்றும் கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகம் என்பவற்றின் முன்னாள் தலைவர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர். Read more

மன்னாரில் 300 பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்-

dfdfவடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, ‘செமட்ட செவன’ எனும் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தின் 300 பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கிவைத்தார். இந்நிகழ்வானது, மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் தலைமையில், மன்னார் நகரசபை மண்டபத்தில் இன்றுகாலை இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 3 இலட்சம் ரூபாய் வரையில், வீடமைப்புக்கான கடன் வழங்கப்பட்டது. மேலும் தெரிவுசெய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு, சீமெந்து பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமியூ முஹமது பஸ்மி, ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் இளைஞர் அணி செயலாளர் டி.பெணாண்டாஸ் கூஞ்ஞ, பிரதேச செயலாளர்கள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

காரைநகர் தொழிற்பயிற்சி நிலைய கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்-

dgfஇலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. இப்பயிற்சி நெறிகளைப் பயில விரும்புவோர், தமது விண்ணப்பங்களை ‘பொறுப்பதிகாரி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழிற்பயிற்சி நிலையம், வலந்தலைச் சந்தி, காரைநகர்’ என்ற முகவரிக்கு தமது சுயவிபர விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு நிலையப் பொறுப்பதிகாரி வே.ஸ்ரீகுகன் அறிவித்துள்ளார். இப்பயிற்சியில் சித்தியடைந்தோருக்கு, தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இந்நிலையத்திற்கான இலவச அரச பஸ் சேவை 782 காரைநகர் வழித்தடமூடாக நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

புலிகள் அமைப்பின் ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை-

thaya georgeகைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த, புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை, அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009ம் ஆண்டு தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த அவர், பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தொடர போதுமான சாட்சியங்கள் இல்லை என, நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர். இதனையடுத்து அவரை விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை அவ்வமைப்பின் ஊடகச்செயலாளர் தயா மாஸ்டர் தொடர்பிலான வழக்கு டிசம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பரவிப்பாஞ்சான் காணியை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை-

paraviகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணியை மீள கையளிக்குமாறு, காணி உரிமையாளர்களான பிரதேச மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பகுதிக்கு இன்றுகாலை சென்ற காணி உரிமையாளர்கள், அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினரிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையும் குறித்த பிரதேசத்திற்குச் சென்ற மக்கள் இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைத்ததோடு, இராணுவத்தினரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்து தமக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், இவ் ஒருவார காலப்பகுதியில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், மக்கள் இன்றுகாலை மீண்டும் பரவிப்பாஞ்சான் பகுதிக்குச் சென்று இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும், மக்களது கோரிக்கை கடிதத்தை பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர். Read more