தம்முடன் கலந்தாலோசிக்காமல் எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான வர்த்தமானியை அச்சடிக்க வேண்டாம் என சிறுபான்மைக் கட்சிகள் கோரியுள்ளன.
எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் உள்ள விடயங்கள், சிறுபான்மை இனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, தம்முடன் கலந்துரையாட வேண்டும் என்றும் சிறுபான்மைக் கட்சிகள் கோரியுள்ளன.சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள், கொழும்பில் உள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸல்லாமில் கலந்துரையாடலில் நேற்று மாலை ஈடுபட்டிருந்தனர். அந்த கலந்துரையாடலையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.