சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டமொன்று இன்று முற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவானவர்கள் இணைந்துகொண்டிருந்தனர். இதேவேளை, இன்று பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தையிலும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற ஏற்பாடாகி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.