lanka vietnamஇலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையில் இருதரப்பு வர்த்தக, சமூக பொருளாதார உறவுகள் கட்டியெழுப்பப்படவுள்ளன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வியட்நாம் பிரதமர் ஹ_யன் ஸ்சுவானுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அமைந்துள்ள உலக பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இந்த பேச்சு வார்த்தையின்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்பாகவே சில முக்கிய உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள தாம் எதிர்பார்ப்பதாக வியட்நாம் பிரதமர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் பொது கலாசார விழுமியங்கள் மற்றும் பாரம்பரிய அம்சங்களை முதன்மைப்படுத்தி இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.