sivan11புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின்  எல்லப்பர் மருதங்குளம் முதியோர் இல்லத்துக்கு இன்று (25.04.2017) செவ்வாய்க்கிழமை ரூபாய் 15,000/- நிதியினூடாக விசேட மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஓராண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதியோர்க்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி (இரண்டாவது) உதவி வழங்கப்பட்டுள்ளது.(முதற்கட்டமாக மன்னார் பட்டித்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள சந்தோம் முதியோர் இல்லத்திற்கு 18,000 ரூபா நிதியுதவி (07.04.2017) வழங்கப்பட்டுள்ளது.)

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரும், வவுனியா மாவட்ட அமைப்பாளருமான திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் செயற்குழு உறுப்பினர் திரு. சு.காண்டீபன், திரு வ.பிரதீபன், திரு ஜெ.இந்துஜன் மற்றும் திரு. ரவி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வழங்கிய உணவினை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட முதியோர்கள் அமரர் விஜயநாதன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்ததுடன், அவர் தம் குடும்பத நலமே பல்லாண்டு வாழவும் வாழ்த்தினர். நாமும் இவ் உதவிக்கு நன்றி கூறி வாழ்த்துகின்றோம்.

sivan01 sivan02 sivan03 sivan04 sivan05 sivan06 sivan07 sivan08 sivan09 sivan10 sivan11