கொழும்பு கொம்பனிவீதியில் உள்ள ஆறு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென அதிர்ந்ததையடுத்து, அதில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த கட்டத்தை அடுத்துள்ள பகுதியில் நிலத்தடி மின்கம்பிகளைப் பதிக்கும் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டதே கட்டடம் அதிர்ந்ததற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. எனினும், வேறேதும் காரணங்களால் கட்டடம் அதிர்ந்திருக்கலாமா என்று கண்டறிவதற்காக, தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினரும், பேரிடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகளும உடனடியாக கொம்பனிவீதிக்குச் சென்று குறித்த கட்டடத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர்.