பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

74 வயதாகும் முஷாரப் பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார். 2007ஆம் ஆண்டில் அவர் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதனால் 100க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக முஷாரப் மீது 2014ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக வழக்கு ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பெஷாவர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிடி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் முஷாரப் மீதான தேசதுரோக வழக்கு விசாரணைக்கு வந்தது அந்த விசாரணையில் அவரை கைது செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பத்தனர். மேலும் அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.