 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு இம்மாத இறுதியில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு இம்மாத இறுதியில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. 
தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் மூன்று கட்டங்களாக இடம்பெறுவதுடன், இதன் முதல் கட்டம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்போது உயர் தர ஆசிரியர்கள் 2590 பேருக்கு வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டம் இந்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், ஒரே பாடசாலையில் 10 ஆண்டுகள் சேவையாற்றிய 1 – 5 ம் தர ஆசிரியர்கள் 1441 பேரில் 760 பேருக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்படி இந்த இடமாற்றம் வழங்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டம் இம்மாத இறுதியில் இடம்பெற உள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.