மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வில் இன்று முன்வைக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம அறிக்கையும், அதுதொடர்பான விவாதமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தின் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பூகோள காலக்கிரம குழுமத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் பிரகாரம், இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும், அரசாங்கத்தின் பதில்கள் குறித்தும் இன்று விவாதிக்கப்படவிருந்தது. எனினும் இந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்த ஏனைய அமர்வின் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.