இலங்கையின் கடற்தொழில் திட்டங்களுக்கு, நியூசிலாந்து முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோனா கெம்கர் ((Joanna Kempker) இதனை தெரிவித்துள்ளார். கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவை, அவரது அமைச்சில் சந்தித்து இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையேயான இரு தரப்பு உறவுகள் உட்பட பல விடயங்கள் குறித்து அவர் விரிவாக கலந்துரையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 
கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றினூடாக ஆட்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு குறித்த வெலின் கப்பலும் வாகனங்களும் மூழ்கடிக்கப்பட்டதாக பதில் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் கே.கே.பி.உதயங்க தெரிவித்தார்.