முன்னைநாள் உடுவில் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் அன்பு மனைவியும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தனின் தாயாருமான அமரர் தர்மலிங்கம் சரஸ்வதி அவர்களின் ஈமைக்கிரியைகள்
28.03.2018 புதன்கிழமை காலை 10.00மணிக்கு கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் கந்தரோடை சங்கம்புலவு மயானத்தில் நடைபெற்றது. அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, உள்ளுராட்சி சபை அங்கத்தவர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.