இன்று நள்ளிரவு முதல் வட்ஸ் அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒஸ்டின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது. Read more
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறையில் நடத்துவதாயின் அதன் நடைமுறைச் சாத்தியம் சம்பந்தமாக ஆராய வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் ஆயிரத்து 532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் அல்லது அரசாங்க அதிபரால் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மற்றும் பாப்பாமோட்டை ஆகிய இரு கிராம மீனவர்களும் தொழில் செய்யும் இடங்கள் தொடர்பில் ஒரு தீர்வு எட்டப்படும் வரை,
இலங்கையின் துறைமுகங்களை இராணுவ செயற்பாடுகளுக்காக சீனாவிற்கு வழங்குவதற்கான எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டின் Nர்மு தொலைக்காட்சியுடனான நேர்காணலின் போது இதனைக் கூறியுள்ளார். டோக்கியோ நகரிலுள்ள பேரரசர் மாளிகையில், சக்கரவர்த்தி அகிஹிதோ மற்றும் மிசிகோ ராணயாரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான பழமையான உறவுகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு ஜப்பான் சக்கரவர்த்தி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இலங்கை மக்கள் அமோக வரவேற்பளித்தமை இந்த சந்திப்பின் போது நினைவுகூரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஜப்பான் பேரரசர் மாளிகையை ஜனாதிபதி பார்வையிட்டார். அதனை அடுத்து, டோக்கியோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக கட்சிகள் மற்றும் சுயா


