வுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா முன்பள்ளி ஆசிரியை திருமதி மீரா குணசீலன் தலைமையில் 16/03/2018 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
புதுமுக முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் இவ் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவும் கோவில்குளம் 10ம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன்இ நிகழ்வில் முன்பள்ளி இணைப்பாளர் திருமதி எஸ்.அருள்வேல்நாயகிஇ புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் திரு ஜெகநாதன் இ தாண்டிக்குளம் 01வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட சு.காண்டீபன்இ சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிற்கான உப பொலிஸ் பரிசோதகர் பிரியதர்சினி இ கிராம பொலிஸ் உத்தியோகத்தர் இளங்கேஸ்வரன்இ கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் கையிலைநாதன்ஆசிரியர்கள்இ பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை சர்வதேச பெண்கள் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே, உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை கொண்டைமடு காட்டுப்பகுதியில் ஒரு தொகுதி கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள். 


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதானவீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் நலன் கருதி, வங்கக் கடலில் உள்ள ராமர் பாலத்திற்கு, எவ்வித சேதமும் ஏற்படாத வகையில், மாற்று வழித் தடத்தில், சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 