பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எனினும் அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்த தடையுத்தரவு இடையூறாக அமையாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றையதினம் அனுமதி வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நீண்டகாலமாக ஏதிலிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், அச்சத்துடனான மனநிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்யும் சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.
தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.
அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரை அரசாங்கத்தில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
வடமராட்சி, வல்வெட்டிது;தறை கடற்கரையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்றுமாலை மீட்கப்பட்டதுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கலிபோர்னியாவில் உள்ள YouTube தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பெண் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.