Header image alt text

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் இன்றுகாலை ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இடம்பெற்றது.

யாழ். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையில் இன்றுகாலை 8.30மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது. ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ கொடிகார, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், மேலதிக அரச அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், பரஞ்சோதி, பிரதேசசபை தவிசாளர் நிரோசன், பிரதேசசபை உறுப்பினர்கள், யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். Read more

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும் கட்சியின் பிரதேச சபை அங்கத்தவர்கள், செயற்பாட்டு அங்கத்தவர்கள் மற்றும் இளைஞர் அணியினருக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (13.09.2018) யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடைபெற்றது.

கட்சியின் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், பிரதேச சபை தவிசாளர் தர்சன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டு அங்கத்தவர்கள் மற்றும் இளைஞர் அணியினர் கலந்து கொண்டிருந்தார்கள்.
Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் 30வது ஆண்டு நிகழ்வாக நேற்று (12.09.2018) செட்டிக்குளம் நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அமரர் மேரிகிறேஸ் சிங்காரம் அவர்களின் ஓராண்டு நினைவாக கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட அவருடைய மகனின் நிதிப்பங்களிப்பில் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

வித்தியால அதிபர் திருமதி கனகரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜீ.ரீ.லிங்கநாதன், கட்சியின் உப தலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), Read more

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று டில்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் 30வது ஆண்டு நிகழ்வாக நேற்று (12.09.2018) செட்டிகுளம், நீலியாமோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறி பாடசாலையில் தரம் 6ல் கல்விபயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

அமரர் மேரிகிறேஸ் சிங்காரம் அவர்களின் ஓராண்டு நினைவாக கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட அவருடைய மகனின் நிதிப்பங்களிப்பில் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

மேற்படி கற்றல் உபகரணங்களை ஆசிரியை திருமதி புஸ்பா அவர்களிடம் கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் வழங்கிவைத்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தூதுவராக க்ரே ஆசிர்வாதம் பதவி ஏற்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பதவியில் உள்ள ரொட்னி பெரேரா, அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செல்லவிருப்பதாகவும்,

அவரது இடத்துக்கு க்ரேஷ் ஆசிர்வாதம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெலானோ என்ற இணையத்தளத்தில் வெளியான இத்தகவலை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

காவற்துறை சேவையில் ஒத்துழைத்து செயற்படுவது தொடர்பில் தென்கொரியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றன. தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதல்வாரத்தில் இளைஞர் விவகார அமைச்சர் சாகல ரத்நாயக்க தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் முக்கியமான அரசாங்க அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். Read more

வியட்நாமின் ஹெநோய் நகரில் இடம்பெறும் ஆசியான் – உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ள சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோட்டோவைச் சந்தித்துள்ளார்.

பிரதமரின் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பிலான இரு தரப்பு பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது. Read more

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்க வேண்டும் என தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தெரிவித்துள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றோம் என்றும் அக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்தியா சென்றுள்ள இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியசாமி சார்பில் டெல்லியில் இன்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சுப்ரமணிய சாமி அழைப்பு விடுத்திருந்தார். Read more