Header image alt text

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலர், உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும், கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே, இந்தக் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனரென, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நண்பகலுக்குப் பின்னரே, அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனரென்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. Read more

அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் சந்தித்து பேசியுள்ளார்.

இது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் கூறுகையில்,

சிறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இன்றுபிற்பகல் சந்தித்தோம். அவர்களில் நால்வரின் உடல்நிலை மிக மோசமாக இருக்கின்றது. ஏனையவர்களும் பலவீனமடைந்தே காணப்படுகின்றார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் தங்களில் அநேகமானவர்கள் மிக நீண்டகாலமாக அதாவது ஒன்பது பத்து வருடங்களாக சிறையில் இருந்துள்ளதாகவும், தம்மை குறுகியகாலம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் அல்லது தமது வழக்குகளை துரிதப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். இது சம்பந்தமாக அரசுடன் கதைக்கும்படி கேட்கின்றார்கள். Read more

வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் 2018ம் ஆண்டுக்குரிய வருடாந்த பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வறுமைக் கோட்டின்கீழுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் செயற்குழு உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) இன் உபதலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம், Read more

தமிழக அரசாங்கத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ் பொது நூலகத்திற்கு 50,000 புத்தகங்களை கையளித்தலும்,

வட மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கும், வாசிகசாலைகளுக்குமான புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் நிதியை கையளிக்கும் மாபெரும் நிகழ்வும் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்றுகாலை 10மணியளவில் இடம்பெற்றது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், கட்சியின் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், சமூக ஆர்வலருமான இரத்தினசிங்கம் கெங்காதரன் (J.P)இன் ஏற்பாட்டில்

“ஐயை” உலகத் தமிழ் மகளிர் குழுமத்தின் அனுசரணையில் யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடை கிராமத்தில் கல்வி மேம்பாட்டிற்காக ஆரம்பக் கல்விப்பிரிவினருக்கான மாலை நேரக்கல்வி நிகழ்வுகள் 14.09.2018 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன. இக் கல்விச் சேவையானது தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான முழுச் செலவினையும் “ஐயை” குழுமம் மேற்கொள்ளும் என்று இ.கெங்காதரன் அவர்கள் இந்த நிகழ்வின்போது தெரிவித்தார். Read more

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 91வது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் தலைவர் நவாலியூர் க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இன்றுமாலை 4.30மணியளவில் யாழ். பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா (முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), சிறப்பு விருந்தினராக தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட் தலைவர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), கௌரவ விருந்தினராக அ.வரதராஜப்பெருமாள் (முன்னாள் முதலமைச்சர் வடக்கு கிழக்கு மாகாணசபை) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ். மத்திய கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இன்றுகாலை இடம்பெற்றது. யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில்; யாழ்;ப்பாணம் பிரதேச செயலாளர் திரு.தயானந்தா தலைமையில் இன்றுகாலை 9.00மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது.

ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், மேலதிக அரச அதிபர், திறைசேரியின் மேலதிக ஆணையாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், விஜயகலா மகேஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், Read more

யாழ்ப்பாணம் வலிவடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலகப் பிரிவில் இன்றுகாலை உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இடம்பெற்றது.

யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் வலிவடக்கு பிரதேச செயலாளர் திரு.சிவஸ்ரீ தலைமையில் இன்றுகாலை 8.30மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது. ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், மேலதிக அரச அதிபர், திறைசேரியின் மேலதிக ஆணையாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், Read more

திருகோணமலை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் இன்றுகாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.5ற்கும் 3.8ற்கும் இடைப்பட்டதாக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறியுள்ளார். இன்று அதிகாலை 12.35 இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்றுகாலை முதல் 8 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

9 வருடங்கள் வரை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் தம்மை விடுவிக்குமாறு கோரியே மேற்படி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தம் மீதான வழக்கு விசாரணைகள் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read more