 தமிழ் மக்கள் ஒருபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தினாலேயே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்ததாக புளொட் அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போதைய நிலையில் நடுநிலை வகிக்க முடியும் என சிலர் கூறினாலும், நடுநிலை வகிப்பதென்பது மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதாக அமைந்துவிடும் என்பதினாலேயே தாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், இரண்டு பிரதான கட்சிகளும் தமது ஆட்சியிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என நினைக்கின்றார்களே தவிர, சிறுபான்மை மக்களின் நலன் குறித்து சிந்திப்பதில்லையனெவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றுவருகின்ற அரசியல் தீர்வு விடயத்தில் இருந்து தமிழ் தலைமைகள் வெளியேறுவது, தமிழ் மக்களுக்கே பாதகத்தை ஏற்படுத்தும் எனவும் சித்தார்த்தன் குறிப்பட்டுள்ளார். (நன்றி hirunews 10.12.2018)