கோப்பாய் தொகுதிக்கு உட்பட்ட வீதிகளில் இரண்டாம் கட்டமாக 15 வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
தேர்தல் தொகுதிக்கு 100 மில்லியன் ரூபா எனும் திட்டத்தின் கீழ் கோப்பாய்த் தொகுதிக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பரிந்துரையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இருபாலை தெற்கு ஞானவைரவர் கோவில் வீதி, இருபாலை தெற்கு ஆரம்ப சுகாதார வைத்திய நிலைய வீதி, இருபாலை தெற்கு சிங்கராயர் லேன், இருபாலை கிழக்கு ஏ.ர் லேன், உரும்பிராய் வடக்கு இருளன் வீதி, உரும்பிராய் வடக்கு மடத்தடி வீதி, உரும்பிராய் வடக்கு நிலாமகளீர் வீதி, உரும்பிராய் கிழக்கு தபால் பெட்டி வீதி, உரும்பிராய் கிழக்கு அயட்டைய புலம் வீதி , அச்சுவேலி தெற்கு பயித்தோலை வீதி, கோப்பாய் மத்தி கண்ணகி அம்மன் வீதி, உரும்பிராய் மேற்கு மூன்று கோயிலடி வீதி, உரும்பிராய் தெற்கு செல்வபுரம் 2ம் ஒழுங்கை, கோப்பாய் வடக்கு கயட்டபுல வீதி, நீர்வேலி வடக்கு பண்ணாலை கிழக்கு வீதி ஆகிய 15 வீதிகளின் புனரமைப்புப் பணிகளை இரண்டாம் கட்டமாக (14,15,16)ஆகிய தினங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.