நாட்டில் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தைச் சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல, இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.
மான்யூலா கோரேட் (Manuela Gorett) தலைமையிலான நிதியத்தின் பிரதிநிதிகள், கடந்த 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் பற்றி, அக்குழு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். Read more
சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி 5ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.