Header image alt text

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சர்வதேச மகளிர் தினம் பெண்களாகிய எங்களுக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து, அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், திருக்கோவிலிலுள்ள அவர்களின் அலுவகத்துக்கு முன்பாக கறுப்பு கொடிகளைப் பறக்கவிட்டு, எதிர்ப்பு கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவில் வாக்ரிஷா வீதியில் அமைந்துள்ள சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில், அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றைத் தொடர்ந்து அங்கு வருகை தந்து இருந்த பெண்கள், கறுப்பு கொடிகளைப் பறக்க விட்டு அரசுக்கு எதிரான தமது கோசங்களை எழுப்பி, எதிர்ப்பைத் தெரிவித்தனர். Read more

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 29ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சத்ய கவேஷகயோ என்ற அமைப்பினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிசிர டி ஆப்ரு, பிரசன்ன ஜயவர்தன மற்றும் ப்ரீதி பத்மன் சுரசேன ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த போதிலும் அவர்கள் சார்பில் எவரும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. Read more

ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெறமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு இன்றியும் என்னால் வெல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார். இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த மூன்று தசாப்த காலமாக சிக்கியுள்ள சேற்றிலிருந்து அதனை மீட்பதற்கு இன ரீதியில் பக்கச்சார்பற்ற -சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட மைய நீரோட்டத்துடன் சாரத தலைவர் ஒருவரிற்காக இலங்கை ஏங்குகின்றது என தான் நம்புவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் வெற்றிபெறுவேன் என நம்புவதற்கு இதுவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

வவுனியா – பெரிமடு பகுதியில் வைத்து சிறுவன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து குறித்த சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா – நெடுங்கேணி – பெரியமடு பகுதியில் வைத்து கடந்த 6ஆம் திகதி 8 வயதுடைய திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவன் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் கனகராயன்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றுமாலை தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. Read more

சர்வதேச மகளிர் தினம்-

Posted by plotenewseditor on 8 March 2019
Posted in செய்திகள் 

இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1789ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர்.

ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர். Read more

வவுனியா குருமன்காடு அப்பிள் முன்பள்ளியின் வருடாந்த திறனாய்வு விளையாட்டு போட்டிகள் முன்பள்ளி அதிபர் விஜிதா தலைமையில் கடந்த 03.03.2019 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இவ் நிகழ்வில் வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், றோயல் லீட் பாடசாலையின் அதிபர் திருமதி கீதாஞ்சலி, புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எப்.பொன்சேகா, குமாரி பன்சி உரிமையாளர் திலக்சன் (பிரசாத்)ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள். Read more

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். Read more

வவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்றுமாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார். பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த சிறுவன் தனது தாயாருடன் வகுப்புக்கு சென்று வீடு திரும்பியிருந்தார். அதன்பின் தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்தார். Read more

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவரை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் இதற்கு முன்னர் தொழில் மற்றும் தொழற்சங்க அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியுள்ளார். அடுத்த வாரம் முதல் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது அந்த குழியில் இருந்து மீட்கப்பட்ட மனித மண்டை ஒடு எலும்புக் கூடுகளை இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பொலிசாருக்கு நேற்று உத்தரவிட்டார்.

சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை (06) கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது குழியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்றும் எலும்புககளும் வெளிவந்தன. Read more