Header image alt text

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி பயிலும் புலேந்திரராசா அபிஷேக் என்ற மாணவனின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது.  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியிலிருந்து ஐந்தாம் கட்டமாக இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி) அவர்கள் கட்சியின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தில் வைத்து மேற்படி துவிச்சக்கரவண்டியை கையளித்தார். இந் நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கா.கமலநாதன் மற்றும் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஞானப்பிரகாசம்(கலன்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம், இன்றுடன் 2வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வைத்திய சேவையை நாடிச் செல்லும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு விடயத்துக்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள்.

இதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் 2 வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். Read more