இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் குழு அறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்போது, இலங்கை குறித்து ஏற்கனே தயாரிக்கப்பட்ட பிரேரணையின் நகல் வரைவு ஆராயப்படவுள்ளது. கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை இலங்கை எதிர்க்குமாயின் அதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். இதனிடையே, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 8ம் திகதி வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.