20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜே.வி.பினருக்கும் இடையிலான சந்திப்பு, பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் கட்சிக் காரியாலயத்தில் இன்றுபிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவரான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஜே.வி.பி சார்பில், அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால் காந்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். Read more
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் ஒய்வுபெற்றுச் செல்வதையிட்டு, குறித்த வெற்றிடத்துக்கு, சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள இந்தப் பாலம் 5 மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்று காலை வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார். ஆவர் சுமார் 8 மணிநேரம் அங்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.