யாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் நேற்று பிற்பகல் 1மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நல்லூர் யமுனா ஏரியைச் சேர்ந்த 79 வயதான சேது அன்ரனி என்பவரே உயிரிழந்தார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டது. 49 சிசி மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் சம்பவத்தில் படுகாயமைடந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டநிலையில் உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கைதுசெய்யப்பட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.