சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி அவர்கள் ஏப்ரல் 2 முதல் 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன், மோல்டோ, மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 18 வது முதல் 22ம் திகதி வரை இடம்பெற்ற இரகசிய கூட்டத் தொடர் ஒன்றில் சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர்கள் அரச அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்களையும் சந்திக்க உள்ளனர்.