Header image alt text

இராணுவத்தின் பாவனையில் கிழக்கு பகுதிகளில் இருந்த காணிகள் இம் மாதம் (25)ஆம் திகதி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இராணுவம் தெரிவித்துள்ளது.

குச்சவெளி, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குரிய திரியாய், பெரியநிலாவெளி பிரதேசங்களிலுள்ள 5.05 ஏக்கர் காணிகள் 4ஆவது கட்டமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவைகளில் 3.5 ஏக்கர் காணி நிலப்பரப்புகள் தனியாருக்கு சொந்தமானதாகும். Read more

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மண்டைதீவினை சேர்ந்த ஜோன் அண்டனி டினேஷ் என்ற 19வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தனது நண்பருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வேளையில் கடல்காற்றின் வேகம் அதிகரித்தமையினால் படகு கவிழ்ந்துள்ளது. இந்நிலையில், படகிலிருந்து இருவர் கடலில் மூழ்கியபோது ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளார். மற்றைய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு அவரின் சடலத்தை மீட்ட மீனவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று அதிகாலை கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வெட்டுக்காயங்களுடன் கிணற்றில் பெண்ணொருவர் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். Read more

வில்பத்து காடழிப்புக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக வில்பத்துவை பாதுகாப்போம் அமைப்பு கூறியுள்ளது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற வில்பத்து காடழிப்பு சம்பந்தமான தகவல்கள் அண்மையில் பெற்றுக்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் பாகியங்கல ஆனந்த சாகரதேரர் கூறியுள்ளார். குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் அங்கு பாதிப்பை ஏற்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்குறியது என்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி கூறியுள்ளார். Read more

கொத்தணிக் குண்டுகள் தடுப்புத் தொடர்பான சாசனமான ஒஸ்லோ உடன்படிக்கையை, இந்நாட்டின் சட்டத்துக்குள் உள்ளீர்த்துக்கொள்வதற்காக, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை, மனிதாபிமான ஆயுதக்களைவுக்காக முன்னிக்கும் அரசு என்ற அடிப்படையில், சர்வதேசத்தில் பொறுப்பான பெயரைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஸ்லோ உடன்படிக்கையை, இலங்கைச் சட்டத்துக்குள் உள்ளீர்த்துக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான யோசனை, பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு!

Posted by plotenewseditor on 20 March 2019
Posted in செய்திகள் 

துயர் பகிர்வு!

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் முன்னாள் உபதலைவர் அமரர் கரவை ஏ.சி. கந்தசாமி அவர்களின் துணைவியார் வசந்தாதேவி கந்தசாமி அவர்கள் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) 

தொடர்புகட்கு: Read more

சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் இன்று தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வaந்ததையடுத்து, பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. Read more

மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட திருக்கேதீஸ்வரம் நாவற்குளம் பகுதியில்,இராணுவத்தின் வசமிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான காணியில் தற்போது அப்பகுதியில் உள்ள இராணுவத்தினர், இராணுவத்திற்குச் சொந்தமான பல்வேறு கழிவுப்பொருட்களை கொட்டப்பட்டு தீ இட்டு எரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் நாவற்குளத்திற்குச் செல்லும் பிரதான சந்தியில் உள்ள தனியாரின் காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில், குறித்த தனியாரின் காணிகயில் இருந்து இராணுவத்தினர் சில வருடங்களுக்கு முன் முற்றாக வெளியேறியுள்ளனர். Read more

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை ஜெனீவாவில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முதலாவது அமர்வின்போது இந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி இலங்கை தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை முன்வைத்தன. இந்தத் தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. குறித்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின்பொது 2 வருடங்களால் நீடிக்கப்பட்டது. Read more

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள நாவலர் முன்பள்ளிக்கு 19,500 பெறுமதியான இரும்பு அலுமாரி ஒன்று வழங்கிவைப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அனுப்பிவைத்த நிதியிலிருந்து இவ்வுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. Read more