
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (21.04.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை வவுனியாவில் நடைபெற்றது. Read more
இலங்கையில் இன்று பல பகுதிகளில் தேவாலயங்கள் ,ஹோட்டல்கள் என பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களில் வந்த புகைப்படங்கள்.
ஆறு இடங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை – 42 மரணங்கள், 243 பேர் காயம், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலை – 7 மரணங்கள், 24 பேர் காயம், நீர்கொழும்பு வைத்தியசாலை – 64 மரணங்கள், 110 பேர் காயம், மட்டக்களப்பு வைத்தியசாலையில், 27 மரணங்கள், 75க்கும் மேற்பட்டோர் காயம். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்கள் அடங்குவதோடு, 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.