வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களின் 22 அடையாள அட்டைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கற்பிட்டி பள்ளிவாசல்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை சஹரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் மதவாச்சி இக்கிரிகொல்லாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மதவாச்சி காவற்துறைக்கு மற்றும் காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. 47 வயதுடைய மொஹமட் ஷாபிர் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.