Header image alt text

அநுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் பிரபல வியாபாரியொருவரின் வீடொன்றிலிருந்து வெடிப்பொருள்கள் தொகையொன்று நொச்சியாகம பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியிலுள்ள வீட்டுக்குச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதே, பெருமளவிலான வெடிப்பொருள்கள் தொகையுடன் சந்தேகநபர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான வானகங்கள், நபர்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் 116 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்க முடியும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நியுசிலாந்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையிலேயே இலங்கையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். Read more

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அறிவிக்கும் வரையில் இவ்வாறு பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பல்கலைகழகங்களில் நடத்தப்படவிருந்த பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக, இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்டர்போல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. Read more

இன்று கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகிலுள்ள ரத்னம் ஒழுங்கையில், வாகனமொன்றில் வைக்கப்பட்ட குண்டு ஒன்றை செயலிழக்கச் செய்ய முற்பட்டபோது குறித்த குண்டு வெடித்துள்ளது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (21.04.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை வவுனியாவில் நடைபெற்றது.  Read more

இலங்கையில் இன்று பல பகுதிகளில் தேவாலயங்கள் ,ஹோட்டல்கள் என பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களில் வந்த புகைப்படங்கள். Read more

ஆறு இடங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, காயமடைந்த 469 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் நாளை மறுதினமும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. Read more

கொழும்பு தேசிய வைத்தியசாலை – 42 மரணங்கள், 243 பேர் காயம், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலை – 7 மரணங்கள், 24 பேர் காயம், நீர்கொழும்பு வைத்தியசாலை – 64 மரணங்கள், 110 பேர் காயம், மட்டக்களப்பு வைத்தியசாலையில், 27 மரணங்கள், 75க்கும் மேற்பட்டோர் காயம். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்கள் அடங்குவதோடு, 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். Read more

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகள் கடந்த 5 ஆம் விடுமுறை வழங்கப்பட்டதுடன் முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 17ம் திகதி ஆரம்பமானது. இதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் புதிய தவணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.