Header image alt text

பத்திரிகை அறிக்கை-

Posted by plotenewseditor on 4 June 2019
Posted in செய்திகள் 

பத்திரிகை அறிக்கை-

                        
முஸலிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டியேற்பட்ட சூழல் குறித்து கடுமையான அதிருப்தி- த.சித்தார்த்தன்,பா.உ.

நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையாக செயற்பட்டு, இனத்தின் நன்மைக்காக எந்த தியாகத்தையூம் செய்வோம் என்பதை நிரூபித்துள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளை பாராட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகட்சியான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்,பா.உ. தெரிவித்துள்ளார். Read more

ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், எழுத்துமூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எம்.பி அத்துரலிய ரத்தன தேரர், அம்பியூலன்ஸ்ஸில், வைத்தியசாலைக்கு நேற்றுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆளுநர்களையும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனையும் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி, நேற்றுடன் நான்கு நாள்களாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை, தேரர் முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்தே, அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சமகால அரசாங்கத்தில் அங்கம் வ​கிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் 9 பேரும், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ள நிலையில்,  இது தொடர்பான இராஜினாமா கடிதங்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோரை, உடன் பதவி விலகுமாறு, நாடு முழுவதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. Read more

ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை நேற்று இராஜினாமா செய்துள்ளனர்.

இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.