Header image alt text

தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தார்.

சுகாதார நிலைமை காரணமாக அவர் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இம்மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தகவல் வழங்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 11 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. Read more

கனகராயன்குளம் பிரதேசத்தில் அதிசொகுசு ஜீப் வாகனமொன்று இன்றுபகல் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் வாகனம் முழுவதுமாக எரிந்துள்ள நிலையில், அதில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். Read more

ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரபவாத ஒழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் மிச்செல் கொனின்ஸ்க் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்திந்துள்ளார்.

அவர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். விசேடமாக பயங்கரவாதத்தை தடுக்கும் தேசிய மூலோபாயம் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது 824ஆவது நாளில், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, பெருமளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிற்காக ஒன்றிணைவோம் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்றையதினம் முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் குறித்த இளைஞர், ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் மணிக் கட்டு இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வருபவர் டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும்போது அது வெடித்தமையால் படுகாயமடைந்துள்ளார். Read more

இலங்கை பரீட்சை திணைக்களம் டிஜிட்டல் மய திட்டத்தின் கீழ் மற்றுமொரு நடவடிக்கையாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்புடன் பரீட்சைகள் திணைக்களத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. (அரச தகவல் திணைக்களம்)