Header image alt text

குடிவரவு-குடியகல்வு சட்டதிட்டங்களை மீறி, இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 7000க்கும் அதிகமானவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக, குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, சட்டவிரோதமாக இலங்கையில் இவர்கள் தங்கியிருப்பதாகவும் இதில் அதிகமானோர் இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களென, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுபாட்டு பணிப்பாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். Read more

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமைகள் மனு அடுத்த மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமை சட்டவிரோதமானதெனவும், இதனூடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தன்னை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதைத் தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டுமென, திறன் அபிவிருத்தி , தொழில் பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியொருவருக்கு நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான  தகுதி இருக்க வேண்டும் என்றும், அதற்காக சிறந்த பலமான அரசியல் தலைவரொருவர் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Read more