Header image alt text

யாழ். அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்தின் 51ஆவது ஆண்டு விழாவும், தந்தை செல்வா சனசமூக நிலைய வீதி திறப்பும், மின் கட்டமைப்பு வழங்கலும் இன்றுமாலை நடைபெற்றது.

இதன்கீழ் அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதிமூலம் மேற்படி பூரணப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 5.5மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் இந்த கிராமத்தில் மாத்திரம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மைதானம் புனரமைக்கப்பட்டு, மின்சார வசதி வழங்கப்பட்டதோடு, சனசமூக நிலைய வீதியும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. Read more

யாழ். சில்லாலை சாந்தை வீரபத்திரர் ஆலய அன்னதான மண்டபத்திற்கான அத்திரவாரக்கல் நாட்டும் வைபவம் இன்றுபிற்பகல் இடம்பெற்றது.

புளொட் தலவைரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இன்றைய நிகழ்வில் முன்னாள் மாகாசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரிகோ, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர் ந.கணேந்திரன், ஆசிரியர் இதயராஜ், செல்வக்குமார், ஆலய தலைவர் தெனிசன், ஆலய பூசாரியார் பரமநாதன் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும், ஊர் மக்களும் கலந்து கொண்டிருந்தனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை போன்று, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் பாரிய சர்ச்சைகள் காணப்படுவதை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன தெரிவிக்கின்றார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சர்ச்சைகள் காணப்படுவதாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து, 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை தயாரித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, தெளிவூட்டிய போதே இதனைக் குறிப்பிட்டார். Read more

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கான போடப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நேற்றில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியிருந்த சுமார் 1600 அகதிகள் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாதுகாப்புக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வவுனியா கூட்டுறவுக்கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் புனர்வாழ்வு நிலையத்தின் கட்டிடமொன்றில் தங்கி வைக்கப்பட்டிருந்தனர். Read more

இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமையை காலநிலை மாற்றம் மற்றும் வாழ்வாதாரங்கள் பன்முகப்படுத்தல் மூலம் கட்டியெழுப்புவதற்காக தென்கொரியா 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளது.

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. Read more

கிளிநொச்சியில் நேற்றுமாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். விபத்தில் இராமநாதன் கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை சேர்ந்த செல்லையா பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த டெக்டருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. Read more