Header image alt text

தியாகி பொன். சிவகுமாரனின் 45ஆவது நினைவு நிகழ்வு 05.06.2019 புதன்கிழமை காலை 10.00மணியளவில் யாழ். உரும்பிராயில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது தியாகி சிவகுமாரனின் உருவச் சிலைக்கு அவரின் சகோதரி ஈகைச் சுடரினை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலின்கம், விந்தன் கனகரட்ணம், பா.கஜதீபன், சி.தவராசா, ஆனந்தி சசிதரன் மற்றும் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். Read more

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் கடந்த 30ஆம் திகதி 2வது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து முதற் தடவையாக மாலைத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்கிறார். Read more

மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோர் மீது இனி வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து அவசரகால சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவசரகால சட்டத்தின் கீழ், முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை கைதுசெய்து வழக்கு தொடர முடியும் என சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா நீதிமன்றத்தை அவமதிப்பு குற்றச்சாட்டிற்காகவே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மாரவில பகுதியை சேர்ந்த இந்திரசிறி சேனாரத்ன என்ற சட்டத்தரணியே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து, 11இளைஞர்கள் கடத்திக் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தை விசாரித்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியான நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்யுமாறு,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால் முன்னிலையாகிய நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.