Header image alt text

கிளிநொச்சி கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சிரேஸ்ட உறுப்பினரும், கட்சியின் மாவட்ட இணைப்பாளருமாகிய திரு. வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் வைபவத்தில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

மேற்படி நிகழ்வில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தினர், ஊர்ப் பெரியார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி, சர்வமத குருமார்களால் நான்கு நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சிரியா மற்றும் ஈராக்கில் செயற்பட்டு வருகின்ற ஐஎஸ் தீவிரவாதிளே திட்டமிட்டிருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரி கொக்கொஃப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் 10வது சர்வதேச மாநாடு அண்மையில் இடம் பெற்றிருந்தது. இதில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த தாக்குதலானது பூகோள தீவிரவாதிகளுடைய திட்டமாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

அநுராதபுரம் – திருகோணமலை வீதியில் மொரவவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அமைச்சர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 08.00 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

இனி வரும் நாட்களில் நாடாளுமன்ற விசேடத் தெரிவுக்குழு முன்னிலையில் வழங்கப்படும் சில சாட்சிகளை இரகசியமான முறையில் பதிவு செய்ய விசேடத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

சில சாட்சியாளர்களின் பதிவுகளை ஊடகங்கள் இல்லாமல் பதிவு செய்யவும் சில சாட்சியாளர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more