Header image alt text

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் டொக்டர் மொஹமட் சாஃபிக்கு எதிராக, இதுவரையில் ஆயிரத்து 3 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குருநாகல், தம்புளை வைத்தியசாலைகளிலேயே, இத்தனை முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மொக்டர் சாஃபி, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு, கர்ப்பத் தடுப்புக்கான சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த நிலையில், Read more

யாழ். கொக்குவில், மஞ்சவனப்பதி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களை நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் Read more

இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா – வன், வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக, ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அது புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள விண்ணுக்கு, இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பலாங்கொடை – பெலிஹ_ல்ஓயா பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற பேஸ்புக் பயனாளிகள் சிலரின் சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளின் போது, 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 160 மி.கி ஹெரோய்ன், 300 மி.கி கொக்கெய்ன், 50 மி.கி ஐஸ் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், Read more

மின்னல் தாக்கியதில் விவசாயியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன் (வயது 40) என்பவரே மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய பங்குடாவெளி – பெரியவெட்டை எனும் வயல் பிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த குறித்த விவசாயி, மின்னல் தாக்கத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரழந்துள்ளார். Read more

நியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் சுனாமி அலைகள் இருக்கும் என முதலில் எச்சரிக்கை விடப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. Read more