Header image alt text

இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அது புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விண்ணுக்கு இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. Read more

அம்பாறை காரைதீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் காரைதீவு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். Read more

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் என்ற நபர் தங்களது சிவப்பு அறிவித்தலுக்கு அமையவே சவுதியின் ஜித்தாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச காவல்துறையான இண்டர்போல் தெரிவித்துள்ளது.  இண்டர்போல் இணைத்தளத்தில் அதன் செயலாளர் நாயகம் ஜுகன் ஸ்டொக்கால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மொஹமட் மில்ஹான் உட்பட சந்தேகநபர்கள் நான்கு பேர் சவுதியின் ஜித்தாவில் வைத்து கைது செய்யபபட்டு, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று இண்டர்போல் இணைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. Read more

இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன், பயங்கரவாத முறியடிப்பு பற்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன், பயங்கரவாத முறியடிப்பு குறித்து, பிரதமர் கலந்துரையாடியிருந்தார் என்றும் இலங்கைக்கு வருவது குறித்து அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்தில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் சடலத்தைப் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (15), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாரதி வீதியிலுள்ள மயானத்தில், குறித்த பயங்கரவாதியின் சடலத்தைப் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதையடுத்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டியது, மரண தண்டனையாகவே அமையவேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து, சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். Read more