Header image alt text

அமெரிக்காவின் அரசியல் – இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ஆர்.க்ளார்க் கூப்பர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களயத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் 7ம் திகதிவரை சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Read more

முல்லைத்தீவு மாங்குளம் முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் தனியார் ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தவேளை, வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

யாழ்ப்பாணம் பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்றுமாலை இடம்பெற்றது. பலாலியில் படைத்தளம் அமைந்துள்ள பகுதியை அண்மித்த காணிகள் இராணுவத்தினரால் சிரமதானம் செய்யப்படுகின்றது. அதேபோல் இன்றும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கல் ஒன்றை இராணுவத்தினர் அகற்ற முற்றபட்டபோது, Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவும், இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்கின்றனர்.

இந்த இரண்டு நாள் விஜயத்தின்போது, வடக்கின் அபிவிருத்தி குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் இதன்போது, பண்டத்தரிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறு எண்ணெய் தொழிற்சாலையை, நிதியமைச்சர் திறந்து வைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

புத்தளம் ஆனைமடு – சிலாபம் வீதியின் ரதஒலாஓயா பாலத்திற்கு அருகில் நேற்றுமாலை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை கண்டெடுத்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாலத்திற்கு அருகே உள்ள பற்றைக்குள் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று கிடப்பதாக நபர் ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் போத்தல் ஒன்றில் அடைக்கப்பட்ட கைக்குண்டை மீட்டுள்ளனர். Read more

ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானில் வர்த்தக தலைநகரான கராச்சிக்கான பயணத்தை இன்று மீண்டும் ஆரம்பிக்கவிருக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான இந்த விமான சேவை வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறுகின்றன.

செவ்வாய் வியாழன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கான பல்வேறு விமான சேவைகள் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமான இடை நிறுத்தப்பட்டன. இடைநிறுத்தப்பட்ட சேவை மீண்டும் இன்று ஆரம்பமாகிறது. Read more

சஹ்ரான் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மடிக்கணினி, 50 இலட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள் என்பவற்றை அம்பாறை பாலமுனை ஹூசைனியா நகர் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து, பொலிஸார் நேற்று (31) கைப்பற்றியுள்ளனர்.

சஹ்ரானின் அம்பாறை மாவட்டத் தலைவனான கல்முனை சியாமிடமிருந்து பெற்றுக்கொண்டத் தகவலுக்கு அமைவாகவே, 50 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்றத் தகவலையடுத்து, கடந்த இரு வாரங்களுக்கு முன், கல்முனை சியாம் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். Read more

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை அடுத்து, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளில் எஞ்சியிருந்தோர், இரண்டாவது கட்டாமக நேற்று முன்தினம் மாலை வவுனியா – பூந்தோட்ட நலன்புரி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பொலிஸ் நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டிருந்த 77 அகதிகளே, இரண்டாவது கட்டமாக வவுனியா பூந்தோட்ட நலன்புரி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Read more

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் கூறியுள்ளார்.

எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என  திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார் அவர் மிகவும் அமைதியானவர். அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராக வர விரும்பினார். ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது. Read more