Header image alt text

சிறுபான்மை இனங்களுக்கிடையலான ஒற்றுமை என்பது முக்கியமானது. ஆனால் அத்தகைய ஒற்றுமை பரஸ்பரமானதாக இருக்க வேண்டும். மாறாக எப்போதும் தமிழ் மக்கள் மாத்திரமே விட்டுக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்புகின்றார் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன்.

அமைச்சர் றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் சொல்கின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விஷேட நேர்காணலில் ஏப்ரல் 21ஆம் திகதியன்றைய தாக்குதல்களின் பின்னர், நாட்டிலும், தமிழர் அரசியலிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றி விளக்குகின்றார்.

நேர்கண்டவர் தேவராசா விருஷன் Read more

கோப்பாய் பிரதேச வீதிகளுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஊடாக கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டில் இவ்வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.  Read more

புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய வீதிக்கான அபிவிருத்தி வேலைகள் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. Read more

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பீட்டர் டடின் நாளை இலங்கை வரவுள்ளாரென, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டிய- செபஸ்தியர் தேவாலயத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

தெஹிவளை பகுதியில் வைத்து தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிநுட்ப பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 53 வயதுடைய மொஹமட் சஹீன் நசூர்தீன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு விசுவமடு, தொட்டியடி பகுதியில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொட்டியடி இந்தியன் வீட்டுத்திட்ட பகுதியில் வசித்துவரும் 26 அகவையுடைய த.கிருசாந்தினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை உறவினர்கள் சென்று பார்த்தபோது இவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. Read more

இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜராகக் கடமையாற்றும் நபர் ஒருவர், அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ- சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஜோன் வோல்க் என்றழைக்கப்படும் மொஹமட் நிசார் இம்ரான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

தேசிய தௌஹீத் ஜமாத்தின் பள்ளிவாசல்களை நிர்மாணித்தார் எனத் தெரிவித்து நசூர்தீன் என்ற பொறியிலாளரை தெஹிவளை கவ்டானயில் வைத்து கைதுசெய்துள்ளதாக ஹொரோவொபொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரோவொபொத்தானை, கெப்பித்திகொல்லாவ, எல்லேவ, பத்தேவ பகுதிகளில் பள்ளிவாசல்களை நிர்மாணித்தார் என்று கூறி சிலர் வழங்கிய தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6ல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையின் ஊடாக பாடசாலையில் வைத்து போடப்பட்டது.

ஊசி போடப்பட்டு சில நிமிடங்களில் மாணவிகள் சோர்ந்து மயங்கும் நிலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மாணவிகளை அருகில் இருந்த சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. Read more

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டமானது இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.

அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கக் கோருமாறு வலியுறுத்தி கடந்த 31ஆம் திகதி தொடக்கம்  கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு முன்பாக தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 3ஆவது நாளாகவும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் தேரரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.