யாழ். ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா 06.06.2019 வியாழக்கிழமை கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, ஸ்கந்தவரோதயன்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக ஆலய வழிபாடு இடம்பெற்று விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதோடு, மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. Read more
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக
யாழ். நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் கடந்த 06.06.2019 வியாழக்கிழமை அன்று நவீன கற்றலுக்கான திறனாய்வு வகுப்பறை (Smart Class Room) புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.