உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் முகப்புத்தகம் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ISIS அமைப்புடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 32 வயதுடைய மொஹமட் அசாருதீன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன தொடர்புடைய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலக அமைதி சுட்டெண் தரவரிசையில், இலங்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, தஜிகிஸ்தானுக்கு இன்று (13) காலை 10:45க்கு பயணமானார்.
தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் அண்மையில் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.