அம்பாறை – கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை தங்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர். Read more
இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும் பஸ்ஸ_ம் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்புடன் பயணித்தல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். போம்பேயோயின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையின் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.