உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை , பிராதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டப் போதே, இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இன்றைய தினம் சஹ்ரானின் மனைவியுடன் அவரது மகளும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். Read more
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தமது இலக்கு என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டங் லாய் மார்க் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
இலங்கை ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற மூன்றாவது புகையிரத விபத்தில் இராணுவத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.