 இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமையை காலநிலை மாற்றம் மற்றும் வாழ்வாதாரங்கள் பன்முகப்படுத்தல் மூலம் கட்டியெழுப்புவதற்காக தென்கொரியா 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளது.

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்காக 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாக வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.