மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (MCC) ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு உண்ணாவிரத போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வண. உடுதும்பர காஷ்யப்ப தேரர், கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளார். அமெரிக்காவுடன் குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடக்கூடாது என்று தெரிவித்தே தேரர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.