முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய விகாரையில் கடந்த 30ம் திகதி முன்றரையடி உயர புத்தபகவான் உருவச்சிலை ஒன்று பாணந்துறைப் பிரதேசத்தில் இருந்து வந்த அசங்க சாமர என்பவர் தலைமையிலான குழுவினரால் பிரதிட்டை செய்யப்பட்ட விடயம், பொதுஜன பெரமுன ஆட்சி குறித்து தமிழ்மக்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கொண்டிருந்த அச்ச உணர்வை நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இரண்டு தரப்பினரதும் வழிபாட்டு நடவடிக்கைகளை தவிர, எந்தவித கட்டுமானப் பணிகளும் முன்னெடுப்பதற்கான தடையுத்தரவை நீதிமன்று வழங்கியுள்ள நிலையிலேயே, அவ்வுத்தரவை அவமதிக்கும் வகையிலும், தமிழ்மக்களை அச்சம் கொள்ள வைக்கும் வகையிலுமே மேற்படி நடவடிக்கை சிங்கள பௌத்த கடும் போக்குவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தாயகப் பகுதியில் மேற்கொண்டு வரும் செயற்திட்டங்களில் ஒன்றான, உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ்,
வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28 ஆகிய தினமொன்றில் நடத்துவதற்கு முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட், இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
புங்குடுதீவில், கடற்படை கட்டளை முகாம் நிர்மாணிப்பதற்கு, அப்பகுதியில் உள்ள 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளனவென, வேலணை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி, தோட்ட வெளி பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மண் அகழ்வை நிறுத்தக் கோரி அப்பகுதி பெண்கள் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.கல்வியங்காடு பகுதியில் கேமி குழுவின் தலைவரின் சகோதரனை இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா, வலப்பனை – மலபட்டாவ பிரதேசத்தில் மண்சரிவில் காணாமல் போயுள்ள 15 வயது மாணவனின் சடலம் 3 ஆவது நாளான நேற்றும் கண்டுபிடிக்க முடியாத நிலையில்,
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.