ஜேர்மனியிலுள்ள மூன்று தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ என்ற நுல் அறிமுக விழாவினை நேற்றையதினம் (07.12.2019) நடாத்தியிருந்தன.
இலங்கையர் ஜனநாயக முன்னணி, தமிழ் மரபு அறக்கட்டளை, இலங்கை ஜேர்மன் நட்புறவு கழகம் ஆகியன இணைந்தே இந்நிகழ்வினை நடாத்தியிருந்தன. டொக்டர் சுபாசினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையர் ஜனநாயக முன்னணியினருடன் தோழர் ஜெகநாதன் அவர்களின் தலைமையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜெர்மன் கிளையினரும் கலந்துகொண்டிருந்தனர். Read more
இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கல்யா பெரிஸ்டர் பிரான்ஸிஸ் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.
புதிய இராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
தேசிய புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பணிப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன்குளம் கந்தபுரம் பகுதியில் இன்றுகாலை தென்னை மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று பலியானது.
திருகோணமலை கிண்ணியா உப்பாறு பாலத்திற்கு அருகில் மாகாவலி கங்கையில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன இரண்டு பேரை தேடும் பணி தொடர்கிறது.
ரயில்வே முகாமைத்துவ பணிகளுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக இத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் குளிர்காலத்தின் போது சுற்றுலாப்பிரயாணம் மேற்கொள்ளக்கூடிய உலகின் சிறந்த வெப்பமான 20 நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாம் இடத்தை பிடித்துள்ளது. யூ.எஸ்.ஏ டு டே இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததுடன், 6 காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.