எண்ணெய் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை முற்றிலுமாக அணைக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், குறித்த கப்பல் இலங்கை கரையிலிருந்து 40 கடல் மைல்தொலைவில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தது. ஆயினும் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ தற்போது பாரிய அளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more
மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டு இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவர் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி நியமிக்கப்படுவார் என கட்சியின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிஷங்க நாணயக்கார கூறியுள்ளார்.
சம்பள ஏற்றம் வழங்கப்படாமை, சம்பளம், மீளாய்வு செய்யப்படாமை, உள்ளக வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபையின் புதிய அரச பொது ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்றைய தினத்திலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு வெல்லாவெளி மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் தனியார் வளவில் உள்ள கிணற்றிலிருந்து 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் 81வயது முதியவர் ஒருவர் துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணமேற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என்று நம்பப்படும் பயங்கரவாதி சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையினை மீண்டும் ஆராய்ந்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.