மலர்வு – 1943.09.19 உதிர்வு – 2020.09.23
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெற்றாவை வாழ்விடமாகவும் கொண்ட வைத்தியக் கலாநிதி ஆறுமுகம் அரசக்கோன் அவர்கள் நேற்று (23.09.2020) புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
இனப்பற்றும், தமிழ் மக்களின் அரசியலில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட இவர் காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
340 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க தயார் எம்.ரி நியூ டயமண்ட் கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான இணக்கப்பாட்டை சட்ட மா அதிபருக்கு கப்பலின் உரிமையாளர் அறிவித்துள்ளார். சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறார்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கை அரசிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததனூடாக, கட்டாயக் கல்விக்கான வயதெல்லையும் 16ஆக அமையும் என UNICEF சுட்டிக்காட்டியுள்ளது. இதனூடாக கட்டாயக் கல்வி தொடர்பில் சிறார்களுக்கு காணப்படும் உரிமையை அர்த்தமுள்ளதாக்க முடியும் எனவும் அது தெரிவித்துள்ளது.
கல்வி பொது தராதர பத்திர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதனை நிறுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிமுதல் உயர் தர மாணவர்களுக்கும் எதிர்வரு 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் 05ஆம் தர மாணவர்களுக்கும் இவ்வாறு மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதனை நிறுத்துமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவி ஆயர்கள் மூவருக்கு இன்று கடும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. சாட்சியாளர்களால் வழங்கப்பட்டுள்ள சாட்சியங்களை நிராகரிக்கும் வகையில் அறிவித்தல்களை வெளியிட வேண்டாம் என இதன்போது ஆணைக்குழு அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த பதிவு நடவடிக்கை கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,324 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 11 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். ரஷ்ய விமான ஊழியர் ஒருவர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 7 பேர், எத்தியோப்பிலிருந்து திரும்பிய ஒருவர், அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 3,129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முனைக்காடு பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முனைக்காடு தெற்கு வீட்டுத்திட்ட பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான இரட்ணசிங்கம் உதயன் (35 வயது) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.